முருக்கன்,BUTEA MONOSPERMA
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பாடல் :
நிலநீரோ டாகாசம் அனல்காலாகி
நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்
செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார் தக்கோர் வாழுந்த
தலைச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக
நயந்தீரே.
இலட்சக்கணக்கில் தாவரங்கள் செடி, கொடி, மரங்கள் இருந்தாலும் முருக்கன் மரத்தை மட்டுமே சந்திர பகவானுக்கு சாமி மரமாக ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு புராணங்கள் விளக்கம் அளிக்கின்றன.
பிரம்மனுக்கும், பார்வதிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்ட போது, பிரம்மன் தன்னை முருக்கன் மரமாக மாற்றிக் கொண்டதாக உத்திரகனடா, பத்ம புராணா என்னும் நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதன் இலையின் நடுவில் விஷ்ணு, இடது பக்கத்தில் பிரம்மா, வலது பக்கத்தில் சிவன் அமர்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.
தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் நாகபட்டினத்தில் உள்ள விஷ்ணு கோவில்களான தமராய கேசவன் கோவில், செளந்திரராஜர் கோவில், வான்புருஷோத்தமன் கோவில், திருவாரூர் ஸ்ரீநாராயணன் கோவில், நன்மதிய பெருமாள் கோவில், மாதவபெருமாள் கோவில், திருச்சியில் அப்பாகுதந்தம் கோவில், இதேபோல் தஞ்சை அக்னீஸ்வரர் சிவன் கோவில், திருவாரூர் சங்கரனேஸ்வரர் சிவன் கோவில்களிலும் இம்மரத்திற்கு பூஜை செய்யப்படுகிறது.
வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள விநாயகபுரம், ஓட்டநேரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீநவக்கிரககோட்டை ஆலயத்தில் சந்திர பகவான் கிரகத்துடன் முருக்கன் மரத்தையும் சேர்த்து பூஜை செய்யப்படுகின்றது.
புத்த மதத்தினர் இம்மரத்தின் பூக்களால் நூலைச் சாயம் தீட்டி புனித பூ நூலாகக் கட்டிக் கொள்வார்கள். இதனால் அவர்களின் ஆசைகளையெல்லாம் எரித்து விட்டதாகக் கருதுகின்றனர்.
வடநாட்டில் கிருஷ்ணா அஷ்டமி விசேஷங்களில், ஹோலி பண்டிகைகளில், அக்னி பூஜைகளில் முருக்கன் மரத்தைப் பெருமளவில் பயன்படுத்துவார்கள்.
முருக்கன் மரத்தை வட நாட்டில் ‘பலாஸ்’ என்றழைப்பார்கள். நம் நாட்டில் ஆங்கிலேயர்கள் படையெடுத்தபோது வடநாட்டில் ‘பலாஸ்’ என்னும் ஊரில் முருக்கன் மரங்கள் நிறைந்த காடுகளில் ராபர்ட் கிளைவுக்கும், வங்காளத்தின் நவாபுக்கும் போர் நடந்தது. அந்த இடத்தில் செந்நிறப்பூக்கள் நிறைந்த முருக்கன் மரங்கள் இருந்ததால் இந்த மரத்திற்கும் பலாஸ் என்ற பெயர் வந்தது.
முருக்கன் மரத்திற்கு புரசு, காட்டு முருக்கு, வெள்ளைப் புரசு, பொரசு என்று தமிழிலும், பலாஸ் டேசு, பலாஸ்கே பூல், குலே டேசு (பூக்கள்), பலாஸ் பாப்டா (விதைகள்) என்று உருது மொழியிலும், FLAME OF THE FOREST, BUTEA MONOSPERMA என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.
முருக்கன் மரம் 9 முதல் 12 மீட்டர் வரை உயரமாக வளரும். இம்மரத்தின் தண்டு, கிளைகள் முறுக்கேறிய நிலையில் கோணலாக வளரும். இலைகள் 7 முதல் 12 செ.மீ. வரை நீளமாகவும், நடுவில் உள்ள இலை 12 முதல் 20 செ.மீ. அகலமும், இரட்டை இலையைப் போல் எதிரெதிராகவும் இருக்கும். இலைகள் 7 முதல்12 செ.மீ வரை அகலமாகவும் இருக்கும். ஜனவரியில் இலைகளெல்லாம் உதிர்ந்து தீப்பிழம்பு போல், செந்நிறத்தில் 4 முதல் 5 செ.மீ. வரை நீளமான பூக்கள் காணப்படும். இது பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரமான இடங்களில் விளைகிறது. இம்மரத்தின் பிசின், பட்டை, பூக்கள், விதை, பிண்ணாக்கு, வேர், இலைகள் அனைத்தும் மனிதனுக்குப் பயன்தரும் வகையில் அமைந்திருக்கின்றது.
முருக்கன் விதைகளின் மருத்துவ குணங்கள்:
பலாஸ் பாப்படா (டாஹ்க்பாப்படா) டாஹ்க் மரத்தின் விதைகளாகும். இது காசளவிற்குப் பெரியதாகவும், வட்டமாகவும், மெல்லியதாகவும் இருக்கும். இதன் மேல்தோல், மஞ்சள் மற்றும் பழுப்பு, வெண்மை கலந்த மஞ்சள் நிறமாகும்.
யுனானி மருத்துவம்:
இயல்பு : உஷ்ணம் - வறட்சி
முக்கிய குணங்கள்:
வாய்வுத் தொல்லையை நீக்கும். வயிற்றுக் கிருமிகளைச் சாகடிக்கும். ஜுரங்களைக் கட்டுப்படுத்தும். புண்களைச் சுத்தம் செய்யும், பாம்புக்கடி விஷத்தை முறிக்கும்.
பயன்படுத்தும் முறை:
வயிற்றுக் கிருமிகளைச் சாகடித்து வெளியேற்றுவதற்காக இதை எரித்தோ அல்லது பவுடராக்கி தனித்தோ அல்லது பிற மருந்துகளுடன் சேர்த்தோ குடிக்கச் செய்வார்கள். ரபா ஜுரத்தைப் போக்க ‘கர்ஞ்சுவா’ பருப்புடன் மாத்திரை தயாரித்து சாப்பிடச் செய்வார்கள். படர் தாமரை நோய்க்கு மேல்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. புண்களில் உள்ள அசுத்தங்களைப் நீக்கி அவற்றைக் குணமாக்குகிறது. கண்நோய்க்கும் இதை மருந்தாகப் பயன்படுத்துவார்கள். இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை ஆண் உறுப்பைத் திடமாக்க பூசு மருந்தாகப் பயன்படுத்துவார்கள். காக்காய் வலிப்பு நோய்க்கு இதைச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்துவார்கள்.
அளவு : 250 மில்லி கிராம் முதல் 1 கிராம்வரை பயன்படுத்தவும்.
சித்தா, ஆயுர்வேத மருத்துவத்திலும் விதைகள் மருந்தாகப் பயன்படுகிறது. விதைகள், வயிற்று நாக்குபூச்சி தொல்லைகளை நீக்குகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. அழுகிய புண்கள் மீதும், சொறி, சிரங்கின் மீதும் விதைகளை அரைத்து,அதன் பவுடரை எலுமிச்சம் சாற்றில் பசையாக்கிப் பூசலாம். சிலருக்கு பரம்பரையாக தலைமுடி உதிர்ந்து வழுக்கையாகிவிடும். முருக்கன் விதையால் தயாரிக்கப்படும் எண்ணெய் வழுக்கையைத் தடுக்கிறது. இதைப் பூசலாம்.
விஞ்ஞான ஆய்வு:
விதையில் புரதம் மற்றும் கொழுபைச் சுரக்கும் என்சைம்கள் உள்ளன. இதில் இருக்கும் ஆறு என்சைம்களில் மானோஸ் பெர்மின் என்னும் ஆர்கிளைப் உள்ளது. இது புழுக்களைக் கொல்லும் குணம் கொண்டது.
பலாசு மரம் என்பதும் இதுவும் ஒன்றா?
ReplyDelete