அரசன் அரசமரம்-Ficus Religiosa
அரசன் அரசமரம்-Ficus Religiosa
- அரச மரம் அரச மர இலை அரச மர கொழுந்து
இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இது
Hindi pippal
Kan aswaththa
Mal arasal
Sans asvaththah
Tel ravi
Tamil arasu
சம்ஸ்கிருதத்தில் அஸ்வத்தம் என்பது அரசமரம்.
அரச மரக்குச்சிகள் இல்லாத ஹோமம், யாகமில்லை இதன் கிளையிலிருந்து உண்டாகும் அக்னியே அக்னிஹோத்ரத்திற்குப் பயன் படும். அரச மரத்தை வெட்டவோ எரிக்கவோ கூடாது
அரசமரத்திற்கு அரணி என்ற பெயரும் உண்டு அசுவம் என்றால் குதிரை. இந்த அரசமரத்திற்கும் குதிரைக்கும் சம்பந்தம் இருக்கிறது. புராணங்கள் அரச மரத்தை மும்மூர்த்தி சொரூபமாகப் போற்றுகின்றன . அடிப்பகுதி பிரம்ம வடிவம் , நடுப்பகுதி விஷ்ணு சொரூபம் , மேல்பகுதி சிவ வடிவம் என்கிறது ஒரு சுலோகம் . மரங்களின் அரசனான அரச மரத்தை வலம் சுற்றி வணங்கும் போது :
மூலதோ பிரம்ம ரூபாய
மத்யதே விஷ்ணு ரூபிணே
அக்ரதச் சிவரூபாய
வ்ருக்ஷ ராஜாயதே நம :
என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்குதல் வேண்டும் .
அரச மரம் தனுசு ராசி மண்டலத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரக் கூட்டத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுக்களை ஈர்த்துத் தன் உடலில் நிரப்பி வைத்துக் கொண்டுஅதைத் தொடுபவர்களுக்கு .,சுற்றுபவர்களுக்கு வழங்குகிறது.
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்களில் "ஈரொன்பதாம் பாண்டி' என்றபடி, பாண்டிநாட்டு 18 திருப்பதிகளில் நான்காவது திவ்ய தேசமாக விளங்குகிறது -புல்லாரண்யம் என்ற திருப்புல்லாணி. ஸ்ரீராம பிரானே இத்தலத்து பெரியபெருமாளை ஆராதித்ததை, திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் இருபது பாசுரங்களிலும் பெரிய திருமடலில் ஒரு துணுக்கு பாசுரத்திலும் (மன்னு மறை நான்கு) அருளிச் செய்திருக்கிறார். திருஞானசம்பந்தரும், அப்பரும் தத்தமது தேவாரப் பதிகங்களில் இத்தலத்தைப் பாராட்டி உள்ளனர்.
வேறெங்கும் காணவியலாத அசுவத்தமும் (அரச மரமும்), நாகத்தின்மீது நர்த்தனிக்கும் ஸ்ரீசந்தான கிருஷ்ணனும், கட்கம், கேடகம், கிரீடத்துடன் சேவை சாதிக்கும் தர்ப்பசயன இராமனும், மூலிகைசக்தி ததும்பிய சக்கரத் தீர்த்தமும் இத்தலத்தின் சிறப்பம்சங்களாக விளங்கி, வருகிறது மருத்துவர்கள் அனைவரும் பயன்படுத்தும் மருத்துவ மரங்களில்
முதன்மையானது அரச மரமாகும்.
அதன் அணைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. அரச மரத்தின் பட்டையைக் கஷாயமிட்டுக் குடித்து வந்தால் மூலம், மூலத்தால் வரும் பாதிப்புகள் கட்டுப்படும். காயங்கள், புண், சிரங்குகள், வெடிப்புகள் இருந்தால் அரச மரத்தின் இலைகளைக் கொண்டு
கட்டுக் கட்டலாம்.
அறிவியல் ரீதியாக மரங்கள் பகலில் பிராண வாய்வையும், இரவில் கரிமில வாய்வையும் வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள். ஆனால் அரச மரம் பகலிலும்,இரவிலும் பிராண வாய்வை மட்டும் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. ! சரியா எனப்பார்க்கவேண்டும் .
இலையை கஷாயமிட்டு குடித்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், சிறுநீர்ப்பை குறைபாடுகள் நலம் பெறும். அரச மரத்தின் பழம், இலைக் கொழுந்து, தண்டுப்பகுதி, வேர் இவற்றைச் சம அளவில் எடுத்து பாலில் கொதிக்க வைத்து சர்க்கரை, தேன் கலந்து
சாப்பிட்டால் தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக இருக்கும் அரச மரத்தின் தண்டுப் பகுதியைத் தனியாக எடுத்து, நிழலில் காய வைத்து அரைத்துப் பவுடராக்கி புண், வடுக்களின் மீது போடலாம். பசையாக்கி பற்றிடலாம். அரச மரத்தின் வேர்ப்பட்டையைக் கஷாயமிட்டு உப்பு மற்றும் வெல்லம் கலந்து குடித்தால் நாள்பட்ட, தீவிர வயிற்றுவலி கட்டுப்படும். அரச மரத்தின் கட்டையை கஷாயமிட்டு கக்குவான் இருமலுக்கு மருந்தாகத் தரலாம். ஆஸ்துமா, சர்க்கரைநோய் போன்றவற்றிற்கும் நல்ல மருந்தாக இவை விளங்குகின்றன.
இதுதவிர, இம்மரத்தின் அனைத்துப் பொருட்களும் வயிற்றுப் போக்கு, சீதபேதி,
தீப்புண், தோல் தொற்றுப் பாதிப்புகள், புண் வடுக்கள், வெள்ளைப்படுதல்,
நரம்புத் தளர்ச்சிஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
'அரச மரத்தைச் சுற்றியவுடன் அடி
வயிற்றைத் தொட்டுப் பார்த்துக்
கொண்டாளாம்'' என்ற பழமொழி
அரச மரத்தைச் சுற்றினால் போதும், குழந்தை உண்டாகிவிடும் என்று நம்பிக் கணவனின் அருகாமையை தவிர்த்து விடக்கூடாது என்றுதான் பழமொழி எச்சரிக்கிறது.
இம்மரத்தில் வளரும் புல்லுருவியை அரைத்து ஒரு எலுமிச்சை அளவு ,பிள்ளையில்லாத பெண்களுக்கு தர தூரம் போவதற்க்குன் முன்று நாள் தந்தாள் சூல் அமையும் .இந்த முறையை பதிவு செய்யவே இதில் எழுதுறேன் .
மருத்துவக் குணங்கள்:
- அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.
- அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.
- குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.
- நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
- இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.
- அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்......
மரங்களின் அரசன் அரசமரம்-
பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம்.ராஜவிருட்சம்
அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. ‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியா வில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
போதிமரம்
அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.
விஞ்ஞான உண்மை
அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.
கருப்பை கோளாறு
அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
பிராணவாயு
நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்
Comments
Post a Comment