அத்தி மரம் வெள்ளி
கிரகத்தின் நல்ல மின் கதிர்வீச்சுகளைத் தன் உடலில் உறிஞ்சி நிரப்பிக்
கொள்கின்றது. அதுதான் அதனுடைய மருத்துவ குணமாக மாறுகிறது என்று வானவியல்
மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.
மருத்துவ குணம்;அத்தி மரத்தின், இலை, பழம், பால் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.
இலை:அத்தி மரத்தின் இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் கட்டுப்படுகின்றன.
பட்டை:
அத்தி
மரப்பட்டையை இரவில் உலர வைத்துக் காலையில் குடிநீராகச் செய்து குடித்தால்
வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவும் நீராகவும்
பயன்படுத்தலாம்.
***
பழம்:
*
நபிபெருமானார்
(ஸல்)அவர்கள் அத்திப்பழம், அத்திப் பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும்
சமைத்துச் சாப்பிட்டால் மூலம், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு குணம் பெறும்
என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் அத்திப் பழம் சாப்பிடுவதால் சீத பேதி,
வெள்ளைப்பாடு, சர்க்கரை நோய், தொண்டைப்புண், வாய்ப்புண், வாத நோய்கள்,
மூட்டு வலி போன்ற நோய்களும் குணம் பெறுகின்றன.
***
பழங்களை
இடித்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் கட்டுப்படும்.
நல்ல மணத்துடன் இருந்தாலும் அத்திப் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய
பூச்சிகள் புழுக்கள் இருக்கும். பொதுவாக, பதப்படுத்தாமல் இதை உண்ண
முடியாது.
***
தினசரி
2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல்
வளர்ச்சியடைந்து பருமன் ஆகும். இரவில் 5 அத்திப் பழங்களைச் சாப்பிட்டால்
நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். அத்திப் பழம் பதப்படுத்தப்பட்ட நிலையில்
நாட்டு மருந்துக் கடைகளில் "சீமை அத்திப் பழம்' என்ற பெயரில் கிடைக்கிறது.
இதனைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத்
தயாரிக்கிறார்கள்.
***
பொதுவாக
அத்தி மரம் ரிஷபம், துலாம் ராசி கொண்டவர்களுக்கும், கிருத்திகை, ரோகிணி,
சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும், வெள்ளிக்கிழமை
மற்றும் 21 ஏப்ரல் முதல் 20 மே மாதம் வரை உள்ள தேதிகளில்
பிறந்தவர்களுக்கும் உகந்த மரமாகும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம்
விளக்குகிறது.
***
அத்தியின் விஞ்ஞான ஆய்வு:
*
ஈரம் 13.6%
புரத வகைகள் 7.4%
கொழுப்பு 5.6%
மாவுப்பொருள் 49.00%
வர்ணப் பொருள் 8.5%
நார்ப்பொருள் 17.9%
சாம்பல் 6.5%
இதில் சிலிகா 0.24%
பாஸ்பாரிக் அமிலம் 0.91% ஆகியவை அடங்கி உள்ளன.
*
இலைகளிலும்,
பழங்களிலும் குளுயாக்கல், தாவரஸ் பீரால்கள், ஹைட்ரோகார்பன்கள், ஸ்பீரால்,
ப்ரைடெலின் ஆகிய வேதியியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
***
இப்பழத்தை
மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன்,
சர்க்கரைச் சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் இருமபுச்சத்து அதிகளவில்
இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப் பழத்தில் இந்தச் சத்துக்கள் நான்கு
மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ,
வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. வைட்டமின் பி.டி ஆகியவையும் குைற்நத அளவில்
இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
***
அத்திப்பழத்தைப்
பொதுவான உடல் பலவீனத்திலும், ஜுரத்திலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.
பதப்படுத்தப்பட்ட அத்திப் பழங்கள் யுனானி நாட்டு மருந்துக் கடைகளில்
விற்கப்படுகிறது. இதற்கச் “சீமை அத்திப்பழம்” என்று பெயர். இதுதான்
இறைவனும், அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ள அத்திப்பழங்கள்
ஆகும். அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேவையான அளவிற்கு நம்
நாட்டில் இவை “சீமை அத்திப்பழம்” என்ற பெயரில் எளிதில் கிடைக்கின்றது.
***
காட்டு அத்திப்பழம்:
*
நம்
நாட்டில் “காட்டு அத்திப்பழம்” என்ற பெயரிலும், “காற்றாடிப்பழம்” என்ற
பெயரிலும் ஒரு வகையான அத்திப்பழம் நாட்டு மருந்துக் கடைகளில்
விற்கப்படுகிறது. இது வெண்குஷ்டத்தைக் குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு
அத்திப்பழத்தைத தினமம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண்
குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். இதைப் பவுடராக்கி பன்னீரில்
கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதைத் தயாரிக்க முடியாதவர்கள் யுனானி
நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் “சபூப் பர்ஸ்” என்னும் மருந்தை
வாங்கிப் பயன்படுத்தலாம்.
Comments
Post a Comment