அப்படியானால் இந்தக் குக்கிள்கான் யார்? மாயன் அல்லாத வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவராக அவர் இருந்திருப்பார்?
ஆரம்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் குக்கிள்கான் அயல் கிரகத்தில் இருந்து வந்த ஒரு ஏலியனோ என்றும் சந்தேகித்தனர். ஆனால் அப்படி இல்லை என பின்னர் முடிவுக்கு வந்தார்கள். அப்படி அவர்கள் முடிவுக்கு வருவதற்குக் காரணமும் ஒன்று உண்டு.
மாயன்களின் பதிவின்படி, குக்கிள்கான் மாயன்களுடன் இருந்து பின்னர் அவர்களை விட்டுப் பிரிந்து விடைபெற்றுச் செல்கிறார். அப்படிச் செல்ல முடிவெடுத்த குக்கிள்கான் கடல் வழியாகவே கிழக்கு நோக்கிச் செல்கிறார். அத்துடன் அவர் தனது சொந்த இடத்துக்குச் செல்வதாகச் சொல்லியும் விடைபெறுகிறார். சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. அதன் பின்னரே மாயன்களின் அழிவும் ஆரம்பித்திருக்கிறது.
அப்படியென்றால் குக்கிள்கான் கடல் வழியாக எங்கே சென்றிருப்பார் என்று ஆராய்ந்து பார்த்தால், குக்கிள்கான் சென்ற இடம் ‘சுமேரியா’ (Sumeria) எனத் தெரிய வந்தது. அவர் சொந்த இடம் செல்வதாகச் சொன்னபடியால் அவர் சென்ர இடம் சுமேரியாவாகவே இருந்திருக்க வேண்டும். இதுவரை மாயன்கள் பற்றி பெருமையுடன் சொல்லி வந்தாலும், அவர்கள் சரித்திரம் 4000 ஆண்டுகள் கொண்ட வரலாறாகவே எமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் சுமேரியரின் வரலாறோ 10000 வருடங்களுக்கு முந்தயது. உலக நாகரீகங்களிலேயே மிகவும் தொன்மையான நாகரீகம் சுமேரிய நாகரீகமாகத்தான் இருந்திருக்கிறது.
எம்மை வியக்க வைக்கும் அறிவுடன் ஆச்சரியப்படுத்திய மாயனுக்கே, அந்த அளவுக்கு அறிவைப் புகுத்தியது குக்கிள்கான் என்ற ஒரு சுமேரியர் என்றால், அந்தச் சுமேரியர்கள் எவ்வளவு அறிவுடன் இருந்திருக்க வேண்டும்? 6000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல், தொழில் நுட்பம் ஆகிய அனைத்திலும் சுமேரியர் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு பல தொல்லியல் ஆதாரங்கள் எமக்குக் கிடைத்திருக்கின்றன. மாயன்கள் வைத்திருந்த ‘கிறிஸ்டல் மண்டையோடுகள்’ கூட (Crystal Skulls) சுமேரியாவில் இருந்துதான் கொண்டு செல்லப் பட்டிருக்கிறது என்றால், நீங்களே சுமேரியர்கள் பற்றிய ஒரு முடிவுக்கு வாருங்கள்.
ஆனாலும், இப்போது சுமேரியரைப் பற்றி ஆராய்வதல்ல எனது நோக்கம். அதனால் மிகவும் சுவாரஷ்யமான சுமேரியர் பற்றிய பல தகவல்களை உங்களுக்கு என்னால் சொல்ல முடியவில்லை. அது நிச்சயம் உங்களுக்கு ஒரு இழப்புத்தான். எனவே மாயனின் உலக அழிவுடன் சம்மந்தப்பட்ட சுமேரியரின் தகவலை மட்டும் தொட்டுச் செல்கிறேன்.
சுமேரியர்களின் அரசர், வேறு சிலருடன் உரையாடும் காட்சி உள்ள ஒரு சுவர் ஓவியம் ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. அந்தச் சுவர் ஓவியம் மிகச் சாதாரணமாகவே முதலில் பார்க்கப்பட்டது. ஆனால் தற்செயலாக அதில் ஒரு இடத்தில் வடிவமைக்கப்பட்ட சூரியக் குடும்பத்தின் படத்தைப் பார்த்த போதுதான் ஆச்சரியம் தோன்றியது.
அந்த ஓவியத்தில், எமது சூரியன் மையத்தில் இருக்க, அதைச் சுற்றி சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களும், அதன் அதன் வரிசையில் வரையப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல், அந்தக் கோள்களின் அளவுகள் கூட கொஞ்சமும் பிசகாமல் வடிவமைக்கப் பட்டிருந்தன.
மிகச் சமீபத்தில்தான், நவீனமான நாங்களே சூரியனைத்தான் மற்றக் கோள்கள் சுற்றுகின்றன எனக் கண்டு பிடித்தோம். அதுவரை பூமியைத்தான், சூரியன் உட்பட மற்றக் கோள்கள் சுற்றுகின்றன என நினைத்திருந்தோம். ஆனால் சுமேரியர்களோ, சூரியனை மையப் பகுதியில் வைத்ததுமில்லாமல், அனைத்துக் கோள்களையும் அதனதன் உருவ அளவுகளிலும் வடிவமைத்திருக்கிறார்கள்.
அத்துடன் நவீன விஞ்ஞானமே ‘நெப்டியூன்’ (Neptun), ‘புளூட்டோ’ (Pluto) ஆகியவற்றை சமீபமாகக் கண்டு பிடித்த வேளையில், சுமேரியர்கள் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அவற்றை மிகச் சரியாகக் கண்டு பிடித்திருந்தனர். இது எப்படிச் சாத்தியம்? நம்பவே முடியாத ஆச்சரியம் அல்லவா இது? அதுவும் வெற்றுக் கண்களால் பார்த்துக் கணிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.
சுமேரியர்களின் ஓவியத்தில் மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இந்தப் பதிவுக்குக் காரணமே அந்த ஆச்சரியம்தான். அது என்ன தெரியுமா……? பிளானெட் எக்ஸ் அல்லது நிபிரு என்று சொல்லப்பட்ட, நாஸா கண்டு பிடித்த அந்தக் கோளும் அதில் காணப்பட்டது.
நுணுக்கமாக அமைந்த அவ்வோவியத்தில் சூரியனை மொத்தமாக பதினொரு கோள்கள் சுற்றுவதாக வரையப்பட்டிருந்தது. அது எப்படி பதினொரு கோள்கள் வரும் எனப் புரியாமல் தவித்தனர் ஆராய்ச்சியாளர்கள். இவ்வளவு நுணுக்கமாக, சூரியன், வியாழன், சனி, பூமி, செவ்வாய் என அனைத்துக் கிரகங்களையும் அளவு கணக்கில் மிகச் சரியாக கணித்த சுமேரியர்கள் இப்படி ஒரு மாபெரும் தவறை விட்டிருப்பார்களா…?
பின்னர் சுமேரியர்களின் சித்திர எழுத்துகளையும், கல்வெட்டுகளையும் படித்த போதுதான் அதற்கு விடை கிடைத்தது. அதன்படி அவர்கள் சுவரில் வரைந்திருக்கும் பதினோராவது கோளை ‘நிபிரு’ எனச் சொல்லியிருக்கிறார்கள். சுமேரியன் மொழியில் ‘நிபிரு’ என்றால் இடைவெட்டும் கோள் (Crossing Planet) என்று அர்த்தம். எப்படி, இப்படி ஒரு அர்த்தம் வரும் வகையில் அவர்கள் பெயரிட்டிருக்க முடியும்?
இவ்வளவுக்கும் காரணமான நிபிருவால் பூமிக்கு 2012 மார்கழி மாதம் அழிவு உண்டுதானா? அல்லது வேறு காரணதால் பூமிக்கு அழிவு உண்டா என்று என்னைக் கேட்டால், “ச்சே! அப்படி எதுவும் இல்லை. பயப்பட வேண்டிய அவசியமே இல்லை” என்றுதான் நானும் பதில் சொல்லியிருப்பேன். ஆனால் எம்மைச் சுற்றி சிலாரால் இரகசியமாகச் சுற்றப்பட்டு வரும் சதிவலை பற்றி அறிந்ததிலிருந்து அப்படிச் சொல்ல முடியவில்லை. அது உண்மையோ, பொய்யோ என்று கூடத் தெரியாமல் இருக்கும் நிலையில் உறக்கமே வரமுடியாது. அது உண்மையாக இருந்தால் நீங்கள் கூட உறங்க மாட்டீர்கள்.
அப்படி என்னதான் எம்மைச் சுற்றிச் சதி நடக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்!
“அறிவியல், அறிவியல் என்று இதுவரை காலமும் எமக்குப் படம் காட்டிவிட்டு, திடீரென உலகம் அழியத்தான் போகிறது என்பது போலப் பயம் காட்டுகிறாரே இந்த ஆள்” என்று நீங்கள் என்னைப்பற்றி, கடந்த பதிவை வாசித்ததிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கலாம். “பேய் இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேயை நினைத்தால் பயமாக இருக்கிறது” என்று எழுத்தாளர் புதுமைப்பித்தன் சொன்னது போலத்தான், உலக அழிவு பற்றி நானும் சொல்ல வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து, மாபெரும் மர்மமான உலக மகா பயங்கரம் ஒன்று தன் வாயை ‘ஆ’ எனத் திறந்து எம்மை விழுங்கக் காத்திருக்கிறது. பல இக்கட்டுகளைத் தாண்டி இன்று அவற்றைப் பற்றி முழுமையாக உங்களுக்கு நான் சொல்லியே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு வந்திருக்கிறேன்.
ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய ஆய்வுகளின்படி, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் அழிவதாயின் எந்த எந்த வகையில் அழியலாம் என்பதை மிக நுணுக்கமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி….,
1. சூரியன், பால்வெளி மண்டலத்தில் உள்ள கருப்புப் பள்ளத்தினாலோ (Dark Rift) அல்லது கருந்துளையினாலோ (Black Hole) ஈர்க்கப்பட்டு அழியலாம்.
2. பூமியின் வட, தென் துருவங்களுக்கு ஊடாகச் செல்லும் அச்சு இடம் மாறி (Pole Shift), பூமியின் காலநிலை மாற்றங்களினால் அழியலாம்.
3. விண்ணில் சுற்றித் திரியும் மிகப் பெரிய விண்கற்களில் (Asteroid) ஏதாவது ஒன்று தாக்கி பூமியில் அழிவுகள் ஏற்படலாம்.
4. பிளானெட் எக்ஸ் (Planet X) அல்லது நிபிரு (Nibiru) என்று சொல்லப்படும் கோள் தாக்குவதால் பூமி அழியலாம்.
5. சூரியனில் ஏற்படும் அதியுயர் மிகைவெப்பப் பாய்ச்சலால் உருவாகும் மின்காந்தக் கதிர்களின் தாக்கத்தால் பூமி அழியலாம்.
இப்படிப் பல விதங்களில் பூமி அழியும் என்று அவர்கள் சொன்னாலும், அவற்றில் சில உண்மையாகவே நடப்பதற்குச் சாத்தியங்கள் இருப்பதாக விஞ்ஞானிகளில் பலர் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, அந்த அழிவுகளில் மிக முக்கியமாக சொல்லப்படுவது சூரியனின் மின்காந்தக் கதிர்த் தாக்குதலைத்தான்.
இவற்றில் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை உண்டு, எந்த அளவுக்குப் பொய் உண்டு என்பதைச் சாதாரணமான மக்களுடன் பகிர்ந்து கொள்ள, எந்த நாட்டு அரசுகளும் முன்வரவில்லை. நாட்டின் நலன்களும், நாட்டு மக்களின் நலன்களும்தானே அரசுகளுக்கு முக்கியம். அப்படி இருக்க ஏன் அரசுகள் இவற்றைச் சொல்லத் தயங்குகின்றன? உண்டு, இல்லை என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியதுதானே! ஏன் இன்றுவரை எந்த அரசும் இது பற்றி தன் வாயைத் திறக்கவே இல்லை? மக்கள் இவற்றை அறியக் கூடாது என இந்த அரசுகளைத் தடுப்பது யார்?
இவற்றைக் கூர்மையாகப் பார்த்தால், உலக மக்களைச் சுற்றி, அவர்களை அறியாமலேயே ஒரு மிகப் பெரிய சதிவலை பின்னப்பட்டு வருகிறதோ எனச் சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. அத்துடன் இந்தச் சதிக்குக் காரணமாக இருப்பவர்கள் உலகின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் மிகப் பெரிய சக்திகளே என்னும் சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. எனது தனிப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையை மட்டும் வைத்து, இந்தச் சதிகள் பற்றிச் சாதாரணமாக உங்களுக்கு நான் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொல்லும் அளவுக்கு நான் பாதுகாப்பு நிறைந்தவனோ, பெரியவனோ கிடையாது. இவற்றை வெளி உலகுக்கு வெளியிடத் துணிச்சலும், பாதுகாப்பும் மிக அவசியமாகின்றது. காரணம், இங்கு குற்றம் சாட்டப்படும் சக்திகளின் வீரியம் மிகப் பெரியது.
நான் சொல்லப் போகும் சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே பலர் கருத்து வெளியிட்டிருந்தாலும், அதில் முக்கியமானவர் என்று கருதப்படும் ஒருவரைக் குறிப்பிட்டு உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர் பெயர் ஜெஸ்ஸி வென்டூரா (Jesse Ventura). அமெரிக்க மல்யுத்தம் (American Wrestling) என்னும் மிகப் பயங்கமாக மோதும் மல்யுத்தப் போட்டிகளை, நீங்கள் நிச்சயம் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அந்த மல்யுத்தத்தில் ஒரு பிரபலமான வீரராக இருந்தவர்தான் இந்த ஜெஸ்ஸி வென்டூரா. இவரை நாம் ஒரு மல்யுத்த வீரர் என்னும் சிறிய கூட்டுக்குள் வைத்து அடைத்துவிட முடியாது. அதையும் தாண்டி இவர் பன்முகத் தன்மை கொண்டவர். பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னொல்ட் ஸ்வார்ட்ஸநெகர் (Arnolt Schwarzenegger) போல, ஜெஸ்ஸி வென்டூராவும் அமெரிக்காவின் மினஸொட்டா (Minnesota) மாநிலத்தின் கவர்னராக இருந்திருக்கிறார். அத்துடன் இவர் ஒரு சினிமா நட்சத்திரமும் கூட. பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். இதில் விசேசம் என்னவென்றால் இவரும் ஸ்வார்ட்ஸநெகரும் சேர்ந்து ‘பிரெடேட்டர்’ (Predator) என்னும் வெற்றிப் படத்தில் நடித்துள்ளனர்.

Comments